Home இலங்கை அரசியல் ஒரு வாக்காளருக்கு 20 ரூபாய் போதும்! ஜனக ரத்நாயக்க

ஒரு வாக்காளருக்கு 20 ரூபாய் போதும்! ஜனக ரத்நாயக்க

0

ஜனாதிபதி தேர்தலில் ஒரு வாக்காளருக்கு செலவிடப்படும் தொகை அதிகபட்சமாக 20 ரூபாவிற்கு உட்பட்டதாக கோரி ஜனாதிபதி வேட்பாளர் ஜனக ரத்நாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் ஜனக ரத்நாயக்க தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

தேர்தல் செலவு கட்டுப்பாட்டின் கீழ் தேர்தல் ஆணையம் ஒரு வாக்காளருக்கு செலவிடப்படும் தொகை குறித்து நடத்திய கருத்து கணிப்பு நடத்தியுள்ளனர்.

கருத்து கணிப்பு

இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஒரு வாக்காளருக்கு 300 ரூபா மற்றும் 250 ரூபா என பரிந்துரைத்துள்ளனர்.

தேசிய மக்கள் சக்தி வாக்காளருக்கு 200 மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 250 ரூபாவை பரிந்துரைத்ததாகவும் ஜனக ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் வேட்பாளர்கள் பரிந்துரைத்தபடி தேர்தலுக்கு முன்மொழியப்பட்ட பெருந்தொகையில் பாரிய சிக்கல் இருப்பதாகவும், அதிகபட்ச தொகையை 20 ரூபாவாக தீர்மானிக்குமாறு கேட்டுக் கொள்வதாகவும் ஜனாதிபதி வேட்பாளர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version