Home இலங்கை அரசியல் ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கு முன்னரே திட்டங்களை அறிந்திருந்த பிள்ளையான்! வெளிவரும் பல உண்மைகள்..

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கு முன்னரே திட்டங்களை அறிந்திருந்த பிள்ளையான்! வெளிவரும் பல உண்மைகள்..

0

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை, முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னரே அறிந்திருந்தமை விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

முன்னரே அறிந்த பிள்ளையான்..

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை பிள்ளையான் சிறையில் இருக்கும்போதே அறிந்திருந்தார்.  

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் நடைபெற்ற போது,  பிள்ளையான் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். எனினும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் திட்டங்களை அவர் முன்னரே அறிந்திருந்தார் என்று புலனாய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். 

மேலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பல கருத்துக்களை வெளிப்படுத்திய பிள்ளையான் நெருங்கிய சகாவான அசாத் மௌலானாவை நாட்டிற்கு அழைத்துவந்து விசாரிக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.  

அசாத் மௌலானாவின் வெளிப்பாடுகளை விசாரிக்க நல்லாட்சி அரசாங்கத்தினால் அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து 2023 மற்றும், 2024 ஆம் ஆண்டிலும், மௌலானாவின் வெளிப்பாடுகளை விசாரிக்க இரண்டு ரணிலால் குழுக்கள் நியமிக்கப்பட்டன. 

இந்தக் குழுவை கத்தோலிக்க சபை முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்ளவில்லை. அதன் அறிக்கை முழுமையாக நிராகரிக்கப்பட்டது. ஆனால் தற்போது எமது அரசாங்கத்தில் இந்த விசாரணை முன்னேற்றம் கண்டுள்ளது.

இந்நிலையில் விசாரணையை மேற்கொள்ள பல தடைகள் காணப்படுகின்றன. அதனை சபையில் வெளிப்படுத்த விடும்பவில்லை.

மேலும், எதிர்கால விசாரணையில் தடைகள் ஏற்படும் என்ற நிலையில் இதனை பாதுகாக்கவேண்டிய தேவை உள்ளது  என குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version