Home முக்கியச் செய்திகள் வெளியான ஆட்சேர்ப்பு போட்டிப் பரீட்சை பெறுபேறுகள்!

வெளியான ஆட்சேர்ப்பு போட்டிப் பரீட்சை பெறுபேறுகள்!

0

இலங்கை கல்வி நிர்வாக சேவை (Sri Lanka Education Administrative Service) ஆட்சேர்ப்பு போட்டிப் பரீட்சைக்கான பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளன.

கடந்த வருடம் (2023) நடைபெற்ற மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகளே இன்று (19) வெளியாகியுள்ளன.

இதனடிப்படையில் பரீட்சையில் சித்தியடைந்த 735 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் பரீட்சை திணைக்கள (Department of Examinations Sri Lanka) இணையதளத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

இலங்கை பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

பரீட்சை பெறுபேறுகள் 

அத்தோடு பரீட்சாத்திகள் முடிவுகளை https://www.doenets.lk என்ற இணையதளத்தின் மூலம் பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தகுதியான 440 பேருக்கு நேர்முகத்தேர்வு நடத்தி கல்வி நிர்வாக சேவையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்களென தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கென்யாவில் விபத்துக்குள்ளான உலங்கு வானூர்தி! இராணுவ தளபதி உட்பட பலர் பலி

700 ஆண்டுகளாக எரிமலை உச்சியில் விநாயகர்: ஒளிந்து கிடக்கும் மர்மம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

  

NO COMMENTS

Exit mobile version