Home இலங்கை அரசியல் கண்டி மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் வெளியானது!

கண்டி மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் வெளியானது!

0

கண்டி தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் கண்டி மாவட்டத்தின் கலகெதர தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 13,336 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 9,083 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இதன்படி, சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 6,361 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

திலித் ஜயவீர 416 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார். 

கலகெதர தேர்தல் தொகுதி 

நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் கண்டி மாவட்டத்தின் கலகெதர தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 18,232 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 15,568 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இதன்படி, சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 5,982  வாக்குகளைப் பெற்றுள்ளார்.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச 1,224 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார். 

இந்த தேர்தல் தொகுதியில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் எண்ணிக்கை 43,498 ஆகும்.

895 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 42,603 ஆகும்.

மேலும், 54,236 பேர் இந்த தொகுதியில் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தபால் மூல வாக்கு

இன்றைய தினம் நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் கண்டி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க  32,295 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 10,635 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச  9,134 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 702 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version