Home இலங்கை சமூகம் ஜனாதிபதி தேர்தல் 2024 : சுமுகமாக நிறைவடைந்த தபால் மூல வாக்களிப்பு

ஜனாதிபதி தேர்தல் 2024 : சுமுகமாக நிறைவடைந்த தபால் மூல வாக்களிப்பு

0

நேற்றும், நேற்றுமுன்தினமும் தபால் மூல வாக்களிப்பு அமைதியான முறையில் இடம்பெற்றதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 7 இலட்சத்து 12 ஆயிரத்து 319 அரச பணியாளர்கள் தகுதி பெற்றிருந்தனர்

மாவட்ட தேர்தல்

தபால் மூலம் வாக்களிக்க நேற்று வாய்ப்பு கிடைக்காத தபால் வாக்காளர்கள், இம்மாதம் 11 மற்றும் 12ம் திகதிகளில் அவர்கள் பணிபுரியும் மாவட்டத்தில் உள்ள மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் தபால் ஓட்டுகளை பதிவு செய்ய மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதன்படி, சிரேஷ்ட பிரதி காவல்துறை அத்தியட்சகர் மற்றும் உதவி காவல்துறை அத்தியட்சகர் அலுவலகங்கள், காவல்துறை விசேட அதிரடிப்படை, விசேட காவல்துறை பிரிவுகள் மற்றும் முப்படை முகாம்களின் சீருடை அணிந்த பணியாளர்கள் மற்றும் அந்த அலுவலகங்களில் உள்ள சிவில் ஊழியர்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் ஊழியர்களுக்கும் தபால் மூலம் வாக்களிக்க வாய்ப்பு  கிடைத்துள்ளது.

       

NO COMMENTS

Exit mobile version