Home முக்கியச் செய்திகள் வன்னியில் நிலைத்து நிற்கும் சஜித் பிரேமதாச…வெளியான மன்னார் தொகுதிக்கான வாக்கு முடிவுகள்

வன்னியில் நிலைத்து நிற்கும் சஜித் பிரேமதாச…வெளியான மன்னார் தொகுதிக்கான வாக்கு முடிவுகள்

0

புதிய இணைப்பு

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் வன்னி தேர்தல் தொகுதிக்கான இறுதி தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

அந்தவகையில், ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 95,222 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 52,573 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கிய அரியநேத்திரன் 36,377 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 21,412 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

மூன்றாம் இணைப்பு

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் வன்னி மாவட்டத்திற்கான மன்னார் தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

அதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 28,491 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 17,181 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கிய அரியநேத்திரன் 10,757 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 4,276 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இரண்டாம் இணைப்பு

நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் வன்னி மாவட்டத்திற்கான முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 28,301வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் 12,810 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 7,117 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 3,453 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

முதலாம் இணைப்பு

நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் வன்னி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 4899 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 4257 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 2,092 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் 1160 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 68 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

https://www.youtube.com/embed/Cga_NaSAtg4

NO COMMENTS

Exit mobile version