Home இலங்கை சமூகம் வவுனியாவில் உணர்வெழுச்சியடன் அனுஷ்டிக்கப்பட்ட சுனாமி நினைவு தினம்

வவுனியாவில் உணர்வெழுச்சியடன் அனுஷ்டிக்கப்பட்ட சுனாமி நினைவு தினம்

0

2004 ஆம் இடம்பெற்ற சுனாமி ஆழிப்பேரலையில் உயிர் நீத்தவர்களிற்கான 20ஆம் ஆண்டு அஞ்சலி நிகழ்வு வவுனியாவில் இடம்பெற்றது.

வவுனியா – பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயம் மற்றும் வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் இன்று (26) குறித்த நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.

பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுகழக மைதானத்தில் அமைந்துள்ள சுனாமி
நினைவு தூபியில் குறித்த பிரார்த்தனை நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக
அனுஷ்டிக்கப்பட்டது.

மலரஞ்சலி செலுத்தப்பட்டது

இதன்போது உயிரிழந்தவர்களிற்கு இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன்,
நினைவு தூபிக்கு மலர்மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

நரசிங்கர் ஆலயத்தின் தலைவர் கோ.சிறிஸ்கந்தராஜா, தலைமையில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் பிரதிஅமைச்சர் உபாலி சமரசிங்க (Upali Samarasinghe), நாடாளுமன்ற உறுப்பினர்கள் ம.ஜெகதீஸ்வரன், செ. திலகநாதன், முத்து முகமது (Muthu Mohammed)மற்றும் இந்து, பௌத்த மதகுருமார்கள், பொது அமைப்புகள், கிராம மக்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

குறித்த நினைவு தூபியானது சுனாமி பேரலை ஏற்பட்டு 31ஆம் நாளில் நரசிங்கர் ஆலய
நிர்வாகத்தினரால் அமைக்கப்பட்டிருந்ததுடன், இலங்கையில் முதலாவதாக அமைக்கப்பட்ட
தூபியாகும். இது தற்போது நகரசபையால் புணர்நிர்மானம் செய்யப்பட்டு பராமரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version