Home இலங்கை சமூகம் புதுக்குடியிருப்பில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட சுனாமி நினைவேந்தல்

புதுக்குடியிருப்பில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட சுனாமி நினைவேந்தல்

0

சுனாமி ஆழிப்பேரலையால் காவுகொள்ளப்பட்ட மக்களின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முல்லைத்தீவு (Mullaitivu)- புதுக்குடியிருப்பில் உணர்வு பூர்வமாக
அனுஷ்டிக்கப்பட்டது.

வன்னிகுறோஸ் மற்றும் சுனாமி நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று (26) காலை 8.05 மணியளவில் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.

சுனாமியால்
உயிர்நீத்த ஆயிரக்கணக்கானவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ள
புதுக்குடியிருப்பு ஐயனார்கோவிலடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி
நினைவாலயத்தில் உயிரிழந்தவர்களிற்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி
செலுத்தப்பட்டது.

பொதுச்சுடர் ஏற்றி அஞ்சலி 

இதன் பின்னர்  பொது சுடர் ஏற்றப்பட்டதனை தொடர்ந்து ஏனையவர்கள் சுடர்
ஏற்றியதுடன் நினைவு தூபிக்கு மலர்மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் (S. Sivamohan), முன்னாள் பிரதேச சபை
உறுப்பினர்கள், பொது அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும்
கலந்துகொண்டிருந்தனர்.

NO COMMENTS

Exit mobile version