Home இலங்கை அரசியல் பாதீட்டீன் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் : மூன்றாவது நாள் ஆரம்பம்

பாதீட்டீன் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் : மூன்றாவது நாள் ஆரம்பம்

0

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான மூன்றாம் நாள் விவாதம் இன்று இடம்பெறுகின்றது.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கான செலவினத் தலைப்புகள் தொடர்பில் இன்று (01) குழு நிலை விவாதம் இடம்பெறவுள்ளது.

அதன்படி காலை 9.30க்கு சபாநாயகர் தலைமையில் ஆரம்பமான இன்றைய நாடாளுமன்ற அமர்வுகள் மாலை 6.30 வரை நடைபெறவுள்ளது.

காலை 09.30 முதல் 10.00 வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

காலை 10.00 முதல் 06.00 வரை 2025 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான குழு நிலை விவாதம் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் 110, 228 முதல் 236 வரை மற்றும் 326 ஆகிய தலைப்புக்களின் கீழ் இடம்பெறவுள்ளது.

மாலை 6.00 முதல் 6.30 வரை ஒத்திவைப்பு வேளையின் போதான எதிர்க்கட்சியின் பிரேரணைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம்  (27) ஆரம்பமான இந்த குழுநிலை விவாதம் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may like this

https://www.youtube.com/embed/E-pPZUGwQGQhttps://www.youtube.com/embed/m66Y6JaZtNs

NO COMMENTS

Exit mobile version