Home இலங்கை அரசியல் சுற்றுலாத்துறை அமைச்சின் செலவினத் தலைப்பின் கீழ் குழுநிலை விவாதம்

சுற்றுலாத்துறை அமைச்சின் செலவினத் தலைப்பின் கீழ் குழுநிலை விவாதம்

0

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் தொடர்ச்சியாக இன்றும் (15) இடம்பெறுகின்றது.

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் (Ministry of Foreign Affairs, Foreign Employment and Tourism) செலவினத் தலைப்புக்களின் கீழ் இன்று குழு நிலை விவாதம் இடம்பெறவுள்ளது.

அதன்படி காலை 9.30க்கு சபாநாயகர் தலைமையில் ஆரம்பமான இன்றைய நாடாளுமன்ற அமர்வுகள் மாலை 6.00 வரை நடைபெறவுள்ளது.

காலை 09.30 முதல் 10.00 வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

காலை 10.00 முதல் 06.00 வரை 2025 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான குழு நிலை விவாதம் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் 112ஆவது தலைப்பின் கீழ் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் கடந்த 27ஆம் திகதி ஆரம்பமான குழுநிலை விவாதம் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/yNIJXt1yVsE

NO COMMENTS

Exit mobile version