Home இலங்கை அரசியல் வடக்கினை நோக்கி அநுர நகர்த்தும் காய்கள்!

வடக்கினை நோக்கி அநுர நகர்த்தும் காய்கள்!

0

2025ஆம் ஆண்டிற்கான வரவு – செலவுத் திட்டத்தினை அண்மையில் ஜனாதிபதி அநுரகுமார  திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் முன்வைத்தார். 

இதன்போது, வடக்கிற்கு சுமார் 5000 மில்லியன்கள் நிதி ஒதுக்கப்பட்டது. இதன் மூலம் வடக்கு மக்களுக்கு அதிகபடியான நிதி ஒதுக்கப்பட்டிருக்கின்றது என்ற மாயை உருவாக்கப்பட்டுள்ளதாக ஈ.பி,ஆர்.எல்.எப் இனுடைய தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். 

மேலும், அவர், சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறித்த வரவு – செலவு திட்டமானது, ஒரு வெற்றுக்காகிதமே என அவர் குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், முன்மொழியப்பட்டுள்ள அனைத்து விடயங்களும் நடைமுறைக்கு வருமா என கேள்வி எழுப்பியுள்ளார். 

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது வரவு – செலவு திட்டத்தில் தமிழ் மக்களுக்கு என பாரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பல்வேறு தரப்புகளில் இருந்து வரவேற்பளிக்கப்பட்டது.

இருப்பினும், இது தற்போதைய அரசாங்கத்தின்  அரசியல் தந்திரமே என விமர்சிக்கப்பட்ட அதேவேளை, இதுவும் முந்தைய அரசாங்கங்களின் நிதித்திட்டங்களை போன்றதே எனவும் விசனங்கள் எழுந்தன. 

இந்நிலையில், இந்த விடயம் குறித்து மேலும் ஆராய்கின்றது ஈ.பி,ஆர்.எல்.எப் இன் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திர உடனான ஐபிசியின் களம் நிகழ்ச்சி,

NO COMMENTS

Exit mobile version