2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் சற்று முன்னர் நிறைவடைந்துள்ளன.
இன்று (06) காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்காளர்களுக்கு வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.
339 உள்ளூராட்சி மன்றங்களுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் 49 அரசியல் கட்சிகள் மற்றும் 257 சுயேட்சை குழுக்களைச் சேர்ந்த 75,589 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இத் தேர்தலில் வாக்களிக்க 17,156,338 வாக்காளர்கள் தகுதி பெற்றிருந்த நிலையில் பல மாவட்டங்களில் வாக்குப்பதிவு 60 சதவீதத்தைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் பதிவான மாவட்ட ரீதியான வாக்குகள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதன்படி,
மன்னார் – 70%
திருகோணமலை – 67%
பொலன்னறுவை – 64%
அநுராதபுரம் – 64%
காலி – 63%
திகாமடுல்ல – 63%
மாத்தளை – 62%
மட்டக்களப்பு – 61%
மொனராகலை – 61%
களுத்துறை – 61%
வவுனியா – 60%
பதுளை – 60%
முல்லைத்தீவு – 60%
நுவரெலியா – 60%
இரத்தினபுரி- 60%
கிளிநொச்சி – 60%
கேகாலை – 58%
கண்டி – 58%
யாழ்ப்பாணம் – 57%
மாத்தறை- 58%
புத்தளம் – 55%
கொழும்பு- 52%
🛑 you may like this…!
https://www.youtube.com/embed/VaNzIS8IJYY
