சிறிலங்கா நாடாளுமன்றத்தில் வீராவேசமாக உரையாற்றும் போது அவ்வப்போது தனது உரைகளில் தமிழர்களின் தலைவரையும் இழுத்து உரையாற்றி சமூக வலைத்தளங்களில் முன்னரங்கை பிடிக்க முயலும் சுயேச்சை உறுப்பினர் அர்ச்சுனா நாமல் ராஜபக்சவுக்கு அருகில் இருந்து அளவளாவிய புதிய காட்சிகள் வெளியாகியுள்ளன.
அதே நாடாளுமன்ற அரங்களில் நடமாடிய உறுப்பினர்களில் யாரோ ஒருவர் இந்த காட்சியை தனது கையடக்கத் தொலைபேசியில் காணொளியாக பிடித்து பகிரங்கப்படுத்தியதால் ஏற்கனவே நாமலுடன் சந்திப்பை நடத்திய சர்ச்சையில் சிக்கிய அர்ச்சுனா இந்த விடயத்தில் வேறு வழியின்றி சமாளிப்புகளை வெளிப்படுத்த வேண்டி வந்தது.
சமகால பேசுபொருளில் இடம்பிடிக்கும் ஒய்வுபெற்ற நீதிபதி இளஞ்செழியன் தொடர்பில் நேரடியாக நாமல் ராஜபக்சவிடம் சொல்லிய சம்பவமே அந்த காட்சியெனவும் மற்றப்படி தான் ஒன்று நாமல் ராஜபக்சவுடன் டீல் பேசவில்லை என்றும் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
இந்தவிடயங்கள் தொடர்பில் தெளிவாக விபரிக்கிறது இன்றைய செய்திவீச்சு……….
https://www.youtube.com/embed/hlxh4JzB8bI
