Home இலங்கை 2025 O/L தேர்வு முடிவுகள் வெளியீடு – 2,25,748 மாணவர்கள் உயர்தரத்திற்கு தகுதி

2025 O/L தேர்வு முடிவுகள் வெளியீடு – 2,25,748 மாணவர்கள் உயர்தரத்திற்கு தகுதி

0
image

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (O/L) பரீட்சை முடிவுகளின்படி, 2,25,748 மாணவர்கள் உயர்தரக் கல்விக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

இன்று (20) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த வருடத் தேர்வில் 11,790 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் ‘A’ சித்தியைப் பெற்று சிறந்த சாதனையைப் பதிவு செய்துள்ளனர். 

இவர்களில் 11,651 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்களாகவும், 139 பேர் தனிப்பட்ட விண்ணப்பதாரர்களாகவும் உள்ளனர்.

அதேவேளை, 7,419 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் தோல்வியடைந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு விடைத்தாள்களை மறுபரிசீலனை செய்ய விரும்பும் மாணவர்கள் ஜூன் 25 முதல் ஜூலை 08 வரை விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2025 O/L தேர்வு முடிவுகள் நேற்று (19) நள்ளிரவில் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Source: https://samugammedia.com/2025-ol-exam-results-released–225748-students-qualify-for-a-levels-1781932205

NO COMMENTS

Exit mobile version