Home இலங்கை அரசியல் 2026 வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் இரண்டாம் நாள்

2026 வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் இரண்டாம் நாள்

0

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் குழு நிலை விவாதத்தின் இரண்டாம் நாள் (17) நடவடிக்கைகள் சபாநாயகர் தலைமையில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன

இந்த குழுநிலை விவாதமானது கடந்த 15 ஆம் திகதி முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை 17 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 09.30 க்கு ஆரம்பமான இன்றைய நாடாளுமன்ற நடவடிக்கைகள் மாலை 06.30 வரை நடைபெறவுள்ளது.

அதன்படி, காலை 09.30 முதல் 10.00 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 22 இன் (1) முதல் (6) வரையின் பிரகாரம் நாடாளுமன்ற அலுவல்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் காலை 10.00 முதல் 10.30 வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு  ஒதுக்கப்பட்டுள்ளதுடன் 10.30 முதல் 11.00 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

காலை11.00 முதல் மாலை  6.00 வரை ஒதுக்கீட்டுச் சட்டமூலம் 2026 இன் குழு நிலை விவாதம் இடம்பெறவுள்ளதுடன் 6.00 முதல் 6.30 வரை சபை ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 5ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/hoSzXU0c9nk

NO COMMENTS

Exit mobile version