Home இலங்கை 2027 வரவு-செலவுத் திட்டம்: மக்களின் பரிந்துரைகளை எதிர்பார்க்கும் கொழும்பு மாநகர சபை!

2027 வரவு-செலவுத் திட்டம்: மக்களின் பரிந்துரைகளை எதிர்பார்க்கும் கொழும்பு மாநகர சபை!

0
image

கொழும்பு மாநகர சபையின் (CMC) 2027ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்திற்கான யோசனைகள் மற்றும் முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு குடியிருப்பாளர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட வார்டுகள் அல்லது உள்ளூர் பகுதிகளின் அபிவிருத்தி தொடர்பான முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகள் 2026 ஆகஸ்ட் 15 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என மாநகர சபை தெரிவித்துள்ளது.

சமர்ப்பிக்கப்படும் அனைத்து யோசனைகளும் நிதி ஒதுக்கீடுகளின் கிடைப்புத் தன்மையை அடிப்படையாகக் கொண்டு பரிசீலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்மொழிவுகளை மேயர், கொழும்பு மாநகர சபை, டவுன்ஹால், கொழும்பு 07 என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும், mayor@colombo.mc.gov.lk அல்லது mayoroffice29@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிகள் ஊடாகவும் சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://samugammedia.com/2027-budget-plan-colombo-municipal-council-looks-forward-to-peoples-suggestions-1785211473

NO COMMENTS

Exit mobile version