Home உலகம் காசாவில் தொடரும் துயரம் : உணவின்றி மூன்றே நாட்களில் பலியான 21 சிறுவர்கள்

காசாவில் தொடரும் துயரம் : உணவின்றி மூன்றே நாட்களில் பலியான 21 சிறுவர்கள்

0

காசாவில்(gaza) ஒரு புறம் இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதல், மறுபுறம் உணவின்றி மக்கள் பெரும் அல்லோல கல்லோலப்படும் அவலம். இந்த நிலையில் கடந்த மூன்றே நாட்களில் 21 சிறுவர்கள் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிரிழந்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒரே நாளில் 81 பேர் உயிரிழந்தனர்.இவ்வாறு உயிரிழந்தவர்களில் 31 பேர் உதவி தேடி சென்றவர்கள்.

 அதிகரித்து வரும் பட்டினி உயிரிழப்புகள்

காசாவில் பட்டினி காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக நஸர் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

காசாவில் சுமார் 20 இலட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். மோதல் காரணமாக அங்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதே நேரத்தில் உதவி முகாம்களை மக்கள் அணுக முயற்சிக்கும் போது அவர்கள் இஸ்ரே தாக்குதலால் கொல்லப்படும் அவலம் நாளாந்தம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version