அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்ட மூலத்தை சவால் செய்து, இதுவரை உயர் நீதிமன்றத்தில் 21 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
‘வினிவித’ அமைப்பின் பொருளாளர் சுனில் ஜெயசுந்தர, கலாநிதி அஜந்தா பெரேரா, சட்டத்தரணி ஷிரால் லத்திலக, இளம் சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பல தரப்பினரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதற்கு முன்னதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மற்றும் பேராசிரியர் ரஞ்சன் அபேரத்ன உள்ளிட்டோரும் குறித்த திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
22ஆவது திருத்தச் சட்ட மூலத்தின் சில ஏற்பாடுகள் மக்களின் இறையாண்மை மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்தை பாதிக்கக்கூடும் என மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனால், குறித்த சட்ட மூலத்தை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் எனத் தீர்ப்பளிக்குமாறு உயர் நீதிமன்றத்திடம் மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Source: https://samugammedia.com/21-petitions-against-the-22nd-constitutional-amendment-1787572885
