Home முக்கியச் செய்திகள் மினிப்பேயில் 22 சடலங்கள் மீட்பு!

மினிப்பேயில் 22 சடலங்கள் மீட்பு!

0

மினிப்பே பிரதேச செயலகப் பிரிவின் உடவத்த, நெலும்மல் கிராமத்தில் மண்சரிவில் சிக்கிய 22 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக கடந்த 27 ஆம் திகதி குறித்த பகுதி மண்சரிவுக்கு உள்ளாகியுள்ளது.

மீட்பு பணிகள்

மண்சரிவுக்கு உள்ளாகும் போது அந்த பிரதேசத்தில் 16 வீடுகள் காணப்பட்டுள்ளதாகவும் அவற்றுள் 12 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.

மண்சரிவுக்குள்ளான 16 வீடுகளில் வசித்த 30 பேர்களில் 22 சடலங்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளன.

தொடர்ந்தும் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version