Home இலங்கை அரசியல் அரசுக்குச் சொந்தமான வணிக நிறுவனங்கள் மூலம் திறைசேரிக்கு ரூ. 227 பில்லியன்

அரசுக்குச் சொந்தமான வணிக நிறுவனங்கள் மூலம் திறைசேரிக்கு ரூ. 227 பில்லியன்

0

அரசுக்குச் சொந்தமான வணிக நிறுவனங்கள் மூலம் திறைசேரிக்கு ரூ. 227 பில்லியன்
அளவிலான பாரிய இலாபம் கிடைத்துள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை
அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.

எனினும், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் ஒட்டுமொத்த இலாபம் குறைந்துள்ளதாகவும்,
மின்சாரக் கட்டணங்கள் திருத்தப்படாததும் மற்றும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்
நிறுவனத்தின் அந்நியச் செலாவணி இலாபம் இல்லாமையுமே இதற்குக் காரணம் பிரதானம்
என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுமக்களின் மூலதனம்

இந்த செல்வம் பொதுமக்களின் மூலதனத்தில் இருந்தும், சந்தையின் தேவைகள் மற்றும்
வினைத்திறனுக்கு ஏற்பவும் உருவாக்கப்பட்டது.

ஊழல் மற்றும் திறமையற்ற தனிநபர்களால் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை,
இலாபகரமானதாக மாற்றும் மறுசீரமைப்பு செயல்முறை தற்போது தொடங்கியுள்ளதாகவும்
அவர் கூறினார்.

திறைசேரிக்குக் கிடைக்கும் வருவாயை அடுத்த ஆண்டுகளில் மேலும் பலப்படுத்த
முடியும் என்று கூறிய அவர், இந்த பொது வருவாயைத் தனியார் மூலதனத்திடம்
ஒப்படைக்க சிலர் முயற்சிப்பதாகவும், குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் கொள்கையின்படி சந்தையானது அரச, தனியார் மற்றும் கூட்டுறவு ஆகிய
மூன்று மாதிரிகள் மூலம் திறம்பட செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ரூ. 280.7 பில்லியனில் இருந்து ரூ. 227.8 பில்லியனாக அரச நிறுவனங்களின் மொத்த
இலாபம் குறைந்தது என்ற செய்திக்கு பதிலளிக்கும் விதமாகவே பிரதி அமைச்சர்
இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version