வன்னியில் ஜனாதிபதி தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்காக விண்ணப்பித்த அரச உத்தியோகத்தர்களின் 228 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக வவுனியா அரசாங்க அதிபர் பி.ஏ.சரத் சந்திர (B.A Sarath Chandra) தெரிவித்துள்ளார்.
வவுனியா (Vavuniya) ஜனாதிபதி தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்காக வன்னி தேர்தல் தொகுதியில் விண்ணப்பித்த 13 ஆயிரத்து 389 அரச உத்தியோகத்தர்களின் விண்ணப்பங்களில் 228 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த விடயத்தை வவுனியாவில் இன்று (25) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
வன்னி தேர்தல்
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்ரகையில், ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக வவுனியா மாவட்டத்தில் 128585, மன்னார் மாவட்டத்தில் 900607, முல்லைதீவு மாவட்டத்தில் 86889 வாக்காளர்களும் உள்ளடங்களாக வன்னி தேர்தல் தொகுதியில் வாக்களிக்க 306081 தகுதி பெற்றுள்ளனர்.
இதேவேளை 387 வாக்களிப்பு நிலையங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தபால் மூல வாக்கெண்ணுவதற்காக 10 நிலையங்களும் சாதாரண வாக்கெண்ணுவதற்காக 27 நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.