Home இலங்கை சமூகம் தமிழர் பகுதியில் தொடருந்து மோதியதில் இளைஞன் உயிரிழப்பு!

தமிழர் பகுதியில் தொடருந்து மோதியதில் இளைஞன் உயிரிழப்பு!

0

மட்டக்களப்பு (Batticaloa) – கருவப்பங்கேணி பகுதியில் தொடருந்து மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (8) அதிகாலையில்
இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் கருவப்பங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய சுந்தரராஜா நிசாந்தன் என்பவரே
இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காவல்துறையினர் விசாரணை

கருவப்பங்கேணி பகுதியில் சம்பவதினமான இன்று அதிகாலை 1.30
மணியளவில் தொடருந்து தண்டவாளத்தில் இருந்துள்ள நிலையில் மட்டக்களப்பில்  இருந்து கொழும்பு (Colombo) நோக்கி பிரயாணித்த கடுகதி தொடருந்து மோதியதில் சம்பவ இடத்திலே
உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலை
ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக காவல்துறையினர் மேற்கொண்டு
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version