முப்படைகளில் இருந்து தப்பி ஓடிய அதிகாரிகள் உட்பட 2325 வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெப்ரவரி 22 முதல் நேற்று (02) வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
மொத்த வீரர்கள்
கைது செய்யப்பட்டவர்களில் 2017 இராணுவத்தினர், 145 கடற்படையினர் மற்றும் 163 விமானப்படையினர் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு, காவல்துறையினர் மேலதிகமாக 281 முப்படையினரையும் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.
