Home முக்கியச் செய்திகள் இலங்கையில் இஸ்ரேலிய மதஸ்தலங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு

இலங்கையில் இஸ்ரேலிய மதஸ்தலங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு

0

இலங்கை முழுவதும் உள்ள சபாத் வீடுகளுக்கு(இஸ்ரேலிய மதஸ்தலங்கள்) 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் வசிக்கும் இஸ்ரேலிய பிரஜைகள் மத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும், ஓய்வு எடுப்பதற்கும், உணவு மற்றும் பானங்களைப் பெறுவதற்கும் பல்வேறு இடங்களில் சபாத் வீடுகள் நிறுவப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், நாட்டில் சபாத் வீடுகளுக்கு தற்போதுள்ள அச்சுறுத்தல்கள் காரணமாக, அந்தந்த காவல் நிலையங்களால் 24/7 பாதுகாப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டினரின் பாதுகாப்பு

இதன்படி, நாட்டில் வசிக்கும் எந்தவொரு வெளிநாட்டினரின் பாதுகாப்பிற்கும் ஏதேனும் அச்சுறுத்தல் இருந்தால், தகுந்த பாதுகாப்பை வழங்க காவல்துறை தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version