Home இலங்கை சமூகம் பொங்குதமிழ் பிரகடனத்தின் 24 ஆவது ஆண்டு எழுச்சிநாள்

பொங்குதமிழ் பிரகடனத்தின் 24 ஆவது ஆண்டு எழுச்சிநாள்

0

பொங்குதமிழ் பிரகடனத்தின் 24ஆவது ஆண்டு எழுச்சிநாள் நிகழ்வுகள் இன்று(17) யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுள்ளன.

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொங்குதமிழ்ப் பிரகடன பொது நினைவுத் தூபி முன்பாக இடம்பெற்ற பிரகடன உரையினை தொடர்ந்து தூபிக்கு மலர் தூவி வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

பொங்குதமிழ் பிரகடனம்

இதில் மாணவர்கள், யாழ் பல்கலைக்கழக ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

பொங்குதமிழ் பிரகடனம், 17.1.2001 அன்று தமிழ் மக்களின் அபிலாஷைகளான சுயநிர்ணய உரிமை, மரபுவழித்தாயகம், தமிழ்த்தேசியம் என்பன அங்கீகரிக்கப்பட வேண்டும் என பிரகடனம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version