நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 257 சுயேட்சைக்குழுக்கள் போட்டியிடுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் புள்ளிவிபரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.
நாளை மறுதினம் (06) செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 49 அரசியல் கட்சிகளுடன் 257 சுயேட்சைக்குழுக்களும் போட்டியிடுகின்றன.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்
இந்தத் தேர்தலில் நாடு தழுவிய ரீதியில் மொத்தமாக 75 ஆயிரத்து 589 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
அவர்களில் இருந்து எட்டாயிரம் பேரளவிலான உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
