Home முக்கியச் செய்திகள் துப்பாக்கிச் சூட்டில் 26 வயது இளைஞன் பலி

துப்பாக்கிச் சூட்டில் 26 வயது இளைஞன் பலி

0

ஸ்ரீபுர பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூடு ஸ்ரீபுர (Sripura) காவல் பிரிவிற்குட்பட்ட கமுன்புர, பிள்ளைர் சந்தியில் இன்று (16) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

காவல்துறை விசாரணை

மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரே துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிச்சூட்டுக்கு T56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://ibctamil.com/article/26-year-man-killed-in-the-gun-shooting-1723774316?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version