Home இலங்கை சமூகம் தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடு சென்ற இலங்கையர்கள்

தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடு சென்ற இலங்கையர்கள்

0

இந்த ஆண்டில் மாத்திரம் சுமார் 266,000 இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், வெளிநாடுகளில் தொழில் புரிவோர் மூலம் இவ்வருடம் மாத்திரம் 4,843 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய செலாவணி நாட்டுக்கு கிடைத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம், இந்த வருட இறுதிக்குள் குறித்த தொகை 6 பில்லியன் ரூபாவினை எட்டுமென எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாட்டு கடவுச்சீட்டு

இந்நிலையில், வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவதை டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்து துரிதப்படுத்த முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் (Department of Immigration and Emigration) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

எதிர்காலத்தில் 7 இலட்சத்திற்கும் அதிகமான வெற்று கடவுச்சீட்டுகள் கிடைக்கவுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாளாந்தம் சுமார் 2000 பேர் கடவுச்சீட்டினை பெற வரிசையில் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version