Home இலங்கை கல்வி பின்தங்கிய கிராமத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற இரு சகோதரிகள்

பின்தங்கிய கிராமத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற இரு சகோதரிகள்

0

வெளியாகியுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை(G.C.E A/L) பெறுபேறுகளின் அடிப்படையில் கிளிநொச்சியில் உள்ள பின்தங்கிய கிராமம் ஒன்றில் இரு சகோதரிகள் விஞ்ஞான பிரிவில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.

கிளிநொச்சி(Kilinochchi) – கண்டாவளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட உழவனூர்
பகுதியைச் சேர்ந்த சகோதரிகள் இருவரே இவ்வாறு சித்தியடைந்துள்ளனர்.

பதவி விலகும் முடிவை எடுக்கும் திரிசங்கு நிலையில் மோடி – அமித்ஷா!

சிறந்த பெறுபேறு

பின்தங்கிய கிராமமான உழவனூர் பகுதியில் அடிப்படை வசதிகளின்றி வறுமையான
சூழ்நிலையிலும் தனது தந்தையின் தனி உழைப்பை மட்டும் வைத்து தமது கல்வியை
தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளனர்.

குறித்த மாணவிகளின் தந்தை லொத்தர் சீட்டுக்கள் விற்பனை செய்பவர் என்ற நிலையில், அவரது தனி வருமானத்தை
கொண்டு தம்மை கல்வி பயில வைத்ததாகவும், சுமார் 5 கிலோமீற்றர் சென்று
தர்மபுரம் மகா வித்தியாலயத்திலேயே தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும்
மாணவிகள் தெரிவித்துள்ளனர். 

இலங்கைக்குள் நுழையும் இந்திய புலனாய்வு அமைப்பின் நோக்கம் அம்பலம்

பல்கலைக்கழகங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படும் திகதி அறிவிப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version