Home இலங்கை குற்றம் யாழ்.கடற்பரப்பில் பெருமளவான கஞ்சாவுடன் மூவர் கைது!

யாழ்.கடற்பரப்பில் பெருமளவான கஞ்சாவுடன் மூவர் கைது!

0

இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக யாழ்ப்பாணத்திற்கு பெருமளவான கஞ்சாவினை கடத்தி வந்த மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (6) எழுவைதீவு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவத்தில் பேசாலை பகுதியை சேர்ந்த ஒருவரும் குருநகர் பகுதியை சேர்ந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணை

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து  323.35 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கான
நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Source: https://tamilwin.com/article/3-arrested-in-jaffna-1746611394

NO COMMENTS

Exit mobile version