Home இலங்கை சமூகம் யாழில் 3 மாதங்கள் நிரம்பிய பெண் குழந்தை பரிதாபமாக உயரிழப்பு

யாழில் 3 மாதங்கள் நிரம்பிய பெண் குழந்தை பரிதாபமாக உயரிழப்பு

0

யாழில் பால் குடித்துவிட்டு உறங்கிய, 3 மாதங்கள் நிரம்பிய பெண் குழந்தை ஒன்று
நேற்றையதினம் உயிரிழந்துள்ளது.

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, சுன்னாகம்
பகுதியைச் சேர்ந்த பெண் குழந்தையே இவ்வாறு
உயிரிழந்துள்ளது. 

குறித்த குழந்தை 21.07.2025 அன்று பிறந்துள்ளது. நேற்றையதினம்
பால் குடித்தவேளை குழந்தைக்கு விக்கல் ஏற்பட்டது. பின்னர், வீட்டார் பிள்ளையை உறங்க வைத்துள்ளனர்.

மரண விசாரணைகள்

இதன்போது, குழந்தை அசைவற்ற நிலையில் இருந்துள்ளது.

இந்நிலையில், தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை, குழந்தை ஏற்கனவே
உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

பின்னர், வீட்டார் யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலைக்கு குழந்தையின் சடலத்தை கொண்டு சென்றனர்.

குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி
ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம்
போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version