Home இலங்கை சமூகம் மருத்துவ நிபுணர்களின் சங்கம் கடும் கவலை: வெளியான காரணம்

மருத்துவ நிபுணர்களின் சங்கம் கடும் கவலை: வெளியான காரணம்

0

2026ஆம் ஆண்டுக்கான மருத்துவ நிபுணர்களின் இறுதிப் பதவிப் பட்டியலில் இரண்டு
மேலதிகப் பதவிகளைச் சேர்க்க, சுகாதார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர்
மேற்கொண்டதாகக் கூறப்படும் முயற்சி குறித்து மருத்துவ நிபுணர்களின் சங்கம்
(AMS) கடும் கவலைகளை வெளியிட்டுள்ளது.

அதிகாரப்பூர்வமாக இறுதி செய்யப்பட்டு, பொதுச் சேவை ஆணைக்குழுவிற்கு
அனுப்பப்பட்ட பட்டியலில், நாட்டின் முன்னணி அரச மருத்துவமனைகளில் இரண்டு புதிய
இறுதிப் பதவிகளைச் சேர்க்க அந்த அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளதாக சங்கம்
குற்றம் சாட்டியுள்ளது.

இது சேவைத் தேவைகளை விட தனிப்பட்ட நலன்களால் மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சி
நடவடிக்கை என்று சங்கம் குறிப்பிட்டுள்ளதுடன், சுகாதார அமைச்சின் செயலாளருக்கு
அனுப்பிய கடிதத்தில் இதனை வலுவாகக் கண்டித்துள்ளது.

இறுதிப் பதவிகள்

புதிய இறுதிப் பதவிகள் அனைத்தும் செயலாளரால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவால்
மதிப்பீடு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும், இந்த நடைமுறையைப்
புறக்கணிப்பது நிறுவப்பட்ட நடைமுறைகளை மீறுவதுடன், இறுதிப் பதவி ஒதுக்கீட்டு
பொறிமுறையின் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையையும் குறைமதிப்பிற்கு
உட்படுத்தும் என்றும் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதனால் நூற்றுக்கணக்கான மருத்துவ நிபுணர்கள் பாதிக்கப்படுவார்கள் என அச்சம்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதி பதவி என்பது ஒரு குறிப்பிட்ட மருத்துவமனை அல்லது சுகாதார நிறுவனத்தில்,
ஒரு குறிப்பிட்ட மருத்துவத் துறைக்கு (இருதயவியல், சத்திர சிகிச்சை,
மகப்பேறியல்) நிரந்தரமாக நியமிக்கப்படும் மருத்துவ நிபுணருக்கான
(Consultant/Specialist) ஒரு பதவியாகும்.

இறுதிப் பதவிகள் பொதுவாக, நாட்டின் வருடாந்தர இடமாற்றப் பட்டியலில் இருந்து
விலக்கு அளிக்கப்படுகின்றன.

NO COMMENTS

Exit mobile version