நாட்டில், போதைக்கு அடிமையானவர்களின் மறுவாழ்வுக்காக மூன்று புதிய மையங்களை
நிறுவ ஆபத்தான மருந்துகளுக்கான தேசிய கட்டுப்பாட்டு சபை முடிவு செய்துள்ளது.
புதிய மையங்கள்
இதன்படி, மாத்தறை, குருநாகல் மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் புதிய
மையங்கள் அமைக்கப்படும் என்று சபையின் பணிப்பாளர் சுஜித் கொத்தலாவல
தெரிவித்தார்.
நாட்டில் ‘ஐஸ்’ போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை வேகமாக
அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
நாடு முழுவதும் கணக்கெடுப்பு
இந்த நிலையில் போதைகளுக்கு அடிமையானவர்களை அடையாளம் காண நாடு முழுவதும்
கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்படும்.
அதேநேரம் இளைஞர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாகாமல், தடுக்க விழிப்புணர்வு
திட்டங்களும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
