Home இலங்கை குற்றம் ஸ்ரீலங்கன் விமானத்தில் விமானப் பயணத்திற்கு இடையூறு விளைவித்த இளைஞர்கள்

ஸ்ரீலங்கன் விமானத்தில் விமானப் பயணத்திற்கு இடையூறு விளைவித்த இளைஞர்கள்

0

ஸ்ரீலங்கன் விமானத்தில் பயணத்திற்கு இடையூறு விளைவித்த மூன்று இளைஞர்கள், நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

விமானத்தில், அதில் அத்துமீறி நடந்து கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்ட மூன்று இளம் பாகிஸ்தான் சுற்றுலாப் பயணிகளே இவ்வாறு விடுக்கப்பட்டுள்ளனர்.

கடுமையான எச்சரிக்கைக்குப் பிறகு விடுதலை செய்ய கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி நேற்று உத்தரவிட்டார்.

குற்றப் பின்னணி

பிரதிவாதிகள் மீது எந்த குற்றப் பின்னணியும் இல்லை என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த மூவரும் சுற்றுலாப் பயணிகளாக இலங்கை வந்து பின்னர் பேங்கொக்கிற்குத் திரும்பும் போது அவர்கள் மூவருக்கும் இடையே ஏற்பட்ட திடீர் வார்த்தை பரிமாற்றத்தால் ஏற்பட்ட விமான போக்குவரத்து இடையூறுக்கு அவர்கள் மன்னிப்பு கேட்ட நிலையில், அவர்களை விடுதலை செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 14

Source: https://tamilwin.com/article/3-youths-disrupt-flight-on-srilankan-flight-1742352294

NO COMMENTS

Exit mobile version