Home உலகம் மத்திய கிழக்கில் தொடரும் போர் பதற்றம்: கடந்த 24 மணிநேரத்தில் 30 பேர் பலி

மத்திய கிழக்கில் தொடரும் போர் பதற்றம்: கடந்த 24 மணிநேரத்தில் 30 பேர் பலி

0

பலஸ்தீனியர்கள் (Palestine) மீது கடந்த 24 மணித்தியாலங்களில் இஸ்ரேல் (Israel) மேற்கொண்ட தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காசாவின் (Gaza) சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மீது கடந்த 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் (Hamas) அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்ட தாக்குதலை தொடர்ந்து ஓராண்டாக நீடிக்கும் இந்த போரினால் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இஸ்ரேல் – ஹிஸ்புல்லா (Hezbollah) இடையே கடந்த மாதம் (27.11.2024) போர் நிறுத்தம் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது.

போர் நிறுத்தம்

இருப்பினும், போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்து 48 மணி நேரம் கடக்காத நிலையில், லெபனான் மீது இஸ்ரேல் மீண்டும் இரு தாக்குதல்களை நடத்தியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இந்நிலையில் நேற்றையதிம் பலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 30 பேர்கொல்லப்பட்டுள்ளதுடன் 84 பேர் காயமடைந்துள்ளதாகக் காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், காசாவின் மத்திய பகுதியில் உள்ள ஏதிலிகள் முகாம் மீது இஸ்ரேல் மேற்கொண்ட ஆளில்லா விமானத்தாக்குதலில் 4 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசாவின் வட பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனையில் நூறிற்கும் மேற்பட்ட நோயாளிகள் உயிரிழக்கும் நிலையில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் குறித்த மருத்துவமனையை இலக்கு வைத்து இஸ்ரேலியப் படைகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version