Home முக்கியச் செய்திகள் லெபனானில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர்கள்

லெபனானில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர்கள்

0

லெபனான் (Lebanon) – இஸ்ரேல் (Israel) போர் காரணமாக லெபனானில் ஆதரவற்ற நிலையில் தங்கியிருந்த 26 இலங்கையர்கள் மீண்டும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இந்த 26 இலங்கையர்களும் டுபாயிலிருந்து (Dubai) எமிரேட்ஸ் விமானமான ஈ.கே – 648 மூலம் நேற்றிரவு (04) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அதன்படி, இதுவரை லெபனானில் ஆதரவற்ற நிலையில் தங்கியிருந்த சுமார் 53 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

பதற்றமான சூழ்நிலை

லெபனானில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சு ஆகியன இணைந்து இந்த இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

சர்வதேச குடியேற்ற அமைப்புடன் (IOM) இணைந்து இந்த வெளியேற்றம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை தூதரகம் அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது.

லெபனானில் உள்ள IOM இன் உதவியைப் பாராட்டிய இலங்கைத் தூதரகம், லெபனானில் பதற்றமான சூழ்நிலையில் இருந்தாலும், மிகவும் தேவைப்படும் இலங்கையர்களுக்கு தொடர்ந்து வசதிகளை வழங்குவதற்கு ஒன்றிணைந்து செயல்படுவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version