ராஷ்மிகா – விஜய் தேவர்கொண்டா
நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது தென்னிந்தியாவை தாண்டி ஹிந்தியிலும் முக்கிய நடிகையாக மாறி இருக்கிறார். அவர் நடித்த படங்கள் பல்வேறு விமர்சனங்களை தாண்டி பெரிய வசூலை குவித்து இருக்கிறது.
ராஷ்மிகா அடுத்து பல படங்களை கைவசம் வைத்து இருக்கிறார். அவர் தெலுங்கு ஹீரோ விஜய் தேவர்கொண்டா உடன் காதலில் இருப்பதாக கூறப்பட்டு வரும் தகவல் எல்லோருக்கும் தெரிந்தது தான்.
அவர்கள் அந்த செய்தியை இதுவரை மறுக்கவும் இல்லை, ஒப்புக்கொள்ளவும் இல்லை. இருப்பினும் அவர்கள் ஜோடியாக வெளிநாடுகளுக்கு ட்ரிப் சென்று வருவது புகைப்பட ஆதாரங்களுடன் அடிக்கடி வெளியாகி வைரல் ஆகின்றன.
மகிழ்ச்சியான நியூஸ்
இவர்கள் இருவரும் இணைந்து ஏற்கனவே கீதா கோவிந்தம் மற்றும் டியர் காம்ரேட் ஆகிய படங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த ஜோடி மீண்டும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் தேவர்கொண்டாவின் 14 – வது படமான இப்படத்தை ராகுல் சங்கிருத்யன் இயக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் முதல் தொடங்கும் என கூறப்படுகிறது.
விஜய்யின் அரசியல் வருகை குறித்து சினேகா – பிரசன்னா கருத்து.. என்ன சொன்னாங்க தெரியுமா?
தற்போது, காதல் ஜோடியாக வலம் வரும் இவர்கள் படத்தில் மீண்டும் இணைய உள்ளார்கள் என்ற தகவல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.