Home உலகம் வெளிநாடொன்றில் பரவும் மர்ம தொற்றால் 79 பேர் பலி

வெளிநாடொன்றில் பரவும் மர்ம தொற்றால் 79 பேர் பலி

0

கொங்கோ குடியரசில் (Republic of the Congo) பரவி வருவிகின்ற புதிய வகையான நோய்த்தொற்று காரணமாக 79 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் அதிகமானோர் 15 முதல் 18 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் பொது சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சகத்தின் படி, அடையாளம் காணப்படாத இந்த நோயால் 376 பேர் நோய் வாய்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோய் அறிகுறிகள்

இந்த நோய்த்தொற்றுக்கு காய்ச்சல், தலைவலி, இருமல், சுவாசிப்பதில் சிரமம் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் காணப்படுமெனவும் அந்த நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

எனினும், இந்த நோய் இன்னும் அறியப்படாத தோற்றத்தில் உள்ளதாகவும் தென்மேற்கு கொங்கோவில் உள்ள குவாங்கோ மாகாணத்திலே கண்டறியப்பட்டுள்ளது என அமைச்சகம் கூறியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version