Home உலகம் நைஜரில் இரத்த வெள்ளம்: 34 இராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை

நைஜரில் இரத்த வெள்ளம்: 34 இராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை

0

மேற்கு ஆப்பிரிக்க (West Africa) நாடான நைஜரில் (Niger) ஆயுதக் கும்பல் நடத்திய தாக்குதலில் 34 இராணுவ வீரா்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது குறித்து அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் (Ministry of Defence) அறிக்கையொன்று வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “புா்கினா ஃபாசோ மற்றும் மாலி எல்லையில் உள்ள பனிபங்கோ பகுதியில் எட்டு வாகனங்கள் மற்றும் 200 இற்கும் மேற்பட்ட மோட்டாா் சைக்கிள்களில் வந்த ஆயுதக் குழுவினா் பாதுகாப்புப் படையினரை நோக்கி சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தினா்.

பயங்கரவாதிகள்

இதில் 34 வீரா்கள் உயிரிழந்ததுடன் 14 போ் காயமடைந்துள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்தியவா்களை “பயங்கரவாதிகள்” என்று குறிப்பிட்ட நைஜா் அரசு, அவா்களில் ஏராளமானவா்களை பாதுகாப்புப் படையினா் சுட்டுக் கொன்றதாகவும், எஞ்சியவா்களை தரை மற்றும் வான் வழியாகத் தேடிவருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

பாதுகாப்புப் பணி

நைஜா், புா்கினா ஃபாசோ, மாலி ஆகிய நாடுகள் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அல்-காய்தா, இஸ்லாமிய தேசம் (ஐஎஸ்) உள்ளிட்ட மத பயங்கரவாத அமைப்புகளுடன் தொடா்புடைய குழுக்களின் தாக்குதல்களை எதிா்கொண்டு வருகின்றன.

அண்மையில், இந்த மூன்று நாடுகளிலும் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றி, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பிரான்ஸ் படையினரை வெளியேற்றின.

பாதுகாப்பு உதவிக்காக ரஷியாவின் தனியாா் படையை நாடின ஆனால், இராணுவ ஆட்சி ஏற்பட்டதற்குப் பிறகு அந்தப் பிராந்தியத்தில் பாதுகாப்பு நிலைமை மோசமாகி வருவதாகக் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version