Home முக்கியச் செய்திகள் விபத்துக்குள்ளான சுற்றுலா பேருந்து: பலர் காயம் – கண்டி வீதி போக்குவரத்து தடை

விபத்துக்குள்ளான சுற்றுலா பேருந்து: பலர் காயம் – கண்டி வீதி போக்குவரத்து தடை

0

நுவரெலியாவில் இருந்து திருகோணமலை (Trincomalee) நோக்கி சென்ற அதிசொகுசு தனியார் பயணிகள் போக்குவரத்து பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து சம்பவம் இன்று (11) அதிகாலை நுவரெலியா – கண்டி (kandy) வீதியில் லபுக்கலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் 37 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போக்குவரத்து முற்றாக பாதிப்பு

சுற்றுலா சென்ற பேருந்து ஒன்றே விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த பேருந்தில் 42 பேர் பயணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்து காரணமாக நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் காயமடைந்தவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.  

Source: https://ibctamil.com/article/37-injured-in-tourist-bus-accident-in-nuwara-eliya-1720665243?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version