Home இலங்கை அரசியல் 39 ஜனாதிபதி வேட்பாளர்களும் விவாதத்திற்கு அழைப்பு

39 ஜனாதிபதி வேட்பாளர்களும் விவாதத்திற்கு அழைப்பு

0

2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விவாதம் திட்டமிட்டபடி செப்டம்பர் 7 ஆம் திகதி நடைபெறும் என்று மார்ச் 12 இயக்கம் தெரிவித்துள்ளது.

மற்ற வேட்பாளர்கள் காட்டும் ஆர்வத்தை கருத்தில் கொண்டு, இந்த விவாதத்தை பல கட்டங்களாக செயல்படுத்த மார்ச் 12 இயக்கம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவாதத்திற்காக 39 வேட்பாளர்களுக்கும் அழைப்பு விடுப்பதாகவும், ஒகஸ்ட் 24 ஆம் திகதி மதியம் 12 மணிக்கு முன் march12movement@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் ஒப்புதலை அனுப்புமாறு வேட்பாளர்களுக்கு மார்ச் 12 இயக்கம்
வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்களை 94724824460 தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் எனவும் மார்ச் 12 இயக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version