Home சினிமா மூன்று நாட்களில் 3BHK படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

மூன்று நாட்களில் 3BHK படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

0

3BHK

சரத்குமார், தேவயானி, சித்தார்த் மற்றும் மீதா ரகுநாத் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் 3BHK. 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இப்படத்தை இயக்கியிருந்தார்.

ஷாந்தி டாக்கீஸ் விஷ்வா இப்படத்தை தயாரித்திருந்தார். யதார்த்தமான கதைக்களத்தில் எடுக்கப்பட்ட இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்

விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பி வரும் 3BHK திரைப்படம் தற்போது மூன்று நாட்களை பாக்ஸ் ஆபிசில் வெற்றிகரமாக கடந்துள்ளது.

இந்நிலையில், இந்த மூன்று நாட்களில் இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 3BHK படம் உலகளவில் மூன்று நாட்களில் ரூ. 4.7 கோடி வசூல் செய்துள்ளது. இது முதல் மூன்று நாட்களில் கிடைத்துள்ள நல்ல ஓப்பனிங் ஆக பார்க்கப்படுகிறது.

Source: https://cineulagam.com/article/3bhk-movie-3-days-box-office-1751856667

NO COMMENTS

Exit mobile version