Home உலகம் துடைப்பத்திற்கு பயந்தோடிய கொள்ளையர்கள்: கனடாவில் நடந்த சம்பவம்

துடைப்பத்திற்கு பயந்தோடிய கொள்ளையர்கள்: கனடாவில் நடந்த சம்பவம்

0

கனடாவில்(Canada) நகைக்கடை ஒன்றில் துடைப்பத்தை பயன்படுத்தி கொள்ளையை தடுத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவம் கனடாவின் மார்க்கம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

முகமூடி அணிந்து கொண்ட மூவர் கடைக்குள் பிரவேசித்து காட்சியறையில் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த நகைகளை கொள்ளையிடும் நோக்கில் சுத்தியல்களைக் கொண்டு காட்சிக்கூடங்களை தாக்கியுள்ளனர்.

கொள்ளை முயற்சி 

இதன்போது, விரைந்து செயல்பட்ட கடையின் உரிமையாளர் துடைப்பத்தால் தாக்கி கொள்ளையர்களை விரட்டி அடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த கொள்ளை முயற்சி சிசிடிவி காணொளியில் பதிவாகியுள்ளதுடன் எந்த ஒரு பொருளும் களவாடப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், ஜெர்ரி சொரானி என்ற கடையின் உரிமையாளர் குறித்த நகைக்கடையை சுமார் 16 ஆண்டுகளாக நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version