Home சினிமா மீண்டும் இணைந்த அன்பே ஆருயிரே கூட்டணி.. ‘கில்லர்’ படத்தின் இசையமைப்பாளர் அறிவிப்பு

மீண்டும் இணைந்த அன்பே ஆருயிரே கூட்டணி.. ‘கில்லர்’ படத்தின் இசையமைப்பாளர் அறிவிப்பு

0

கில்லர் 

இசை திரைப்படத்திற்கு பின் மிகவும் பிஸியான நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வரும் எஸ்.ஜே. சூர்யா தற்போது 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இயக்குநராக களமிறங்கியுள்ளார்.

கில்லர் என்கிற தலைப்பில் இப்படம் உருவாகவுள்ளது. இப்படத்தை ஸ்ரீ கோகுலம் மூவிஸ் தயாரிக்கின்றனர். அயோத்தி படத்தில் நடித்து மக்களின் மனதில் இடம்பிடித்த நடிகை ப்ரீத்தி அஸ்ரனி கில்லர் படத்தின் கதாநாயகியாக கமிட்டாகியுள்ளார்.

பல காதல் முறிவு.. திருமணம் குறித்து மனம் திறந்து பேசிய கமல் மகள் ஸ்ருதி ஹாசன்

இசையமைப்பாளர் அறிவிப்பு

இப்படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்ட நிலையில், இசையமைப்பாளர் யார் என்பது குறித்து அறிவிப்பை வெளியிடவில்லை. வருகிற ஜூலை 7ம் தேதி அதற்கான அறிவிப்பு வெளிவரும் என எஸ்.ஜே. சூர்யா அறிவித்திருந்தார்.

அதன்படி, கில்லர் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பாளராக கமிட்டாகியுள்ளார் என அறிவித்துள்ளனர். அன்பே ஆருயிரே படத்திற்கு பின் எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் உருவாகும் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version