Home இலங்கை அரசியல் தென்னிலங்கையில் திடீரென ஒன்றுகூடும் முன்னாள் ஜனாதிபதிகள் – அரசியல் மட்டத்தில் பரபரப்பு

தென்னிலங்கையில் திடீரென ஒன்றுகூடும் முன்னாள் ஜனாதிபதிகள் – அரசியல் மட்டத்தில் பரபரப்பு

0

முன்னாள் ஜனாதிபதிகளின் திடீர் சந்திப்பு தொடர்பில் தென்னிலங்கை அரசியல் மட்டத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகள் நான்கு பேர் முன்னாள் ஜனாதிபதிகள் நாளை மறுதினம் முக்கிய கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொழும்பிலுள்ள ஹோட்டலில் ஒன்றில் பிற்பகல் வேளையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க வரிகள்

அதற்கமைய, முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இந்த சந்திப்பில் ஈடுபடவுள்ளனர்.

இலங்கை மீது அமெரிக்கா விதித்த 44 சதவீத வரிகள் மற்றும் அதற்கு பதிலளிக்கும் நடவடிக்கைகள் குறித்து இதன்போது விவாதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version