Home இலங்கை குற்றம் தென்னிலங்கையில் வீடொன்றுக்குள் மர்மம் – 4 மனித மண்டை ஓடுகளால் பரபரப்பு

தென்னிலங்கையில் வீடொன்றுக்குள் மர்மம் – 4 மனித மண்டை ஓடுகளால் பரபரப்பு

0

கம்பஹா, வேயங்கொட, நைவல பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அருகில் ஒரு பையில் சந்தேகத்திற்கிடமான 4 மனித மண்டை ஓடுகள் மற்றும் பல எலும்புத் துண்டுகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

வீடு அமைந்துள்ள காணியில் உள்ள ஒரு கட்டடத்தில் கிராம சேவகர் அலுவலகம் அமைந்துள்ளது.

மேலும் கிராம சேவகர் அலுவலக அதிகாரியின் இரகசிய தகவலைத் தொடர்ந்து இந்த சந்தேகத்திற்கிடமான பொதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மனித மண்டை ஓடுகள்

உரிய காணி சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய ஒரு மருத்துவருக்கு சொந்தமானது.

யாரோ ஒருவர் 4 மனித மண்டை ஓடுகள் மற்றும் எலும்புத் துண்டுகளை இந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version