Home முக்கியச் செய்திகள் நாக பாம்பு தீண்டி 4 வயது சிறுவன் பலி

நாக பாம்பு தீண்டி 4 வயது சிறுவன் பலி

0

நாக பாம்பு தீண்டியதால் 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்

ஹங்குரன்கெத்த உடகலஉட பிரதேசத்தில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், சிறுவனின் பெற்றோர் வயலில் வேலை செய்துகொண்டிருந்த வேளையில், அருகில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை நாக பாம்பு தீண்டியுள்ளது.

இரத்த ஓட்டம் தடைப்பட்டிருக்கலாம்

இதனால் சிறுவனின் காலில் ஏற்பட்ட காயத்துக்கு உடனடியாக கை வைத்தியம் செய்யப்பட்டது.

எனினும், அது பலனளிக்காத காரணத்தால் பெற்றோர் ரிகிலகஸ்கட வைத்தியசாலையில் சிறுவனை அனுமதித்துள்ளனர். .

எனினும், சிகிச்சை பலனின்றி சிறுவன் வைத்தியசாலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சிறுவனுக்கு அளிக்கப்பட்ட கை வைத்தியத்தின் போது விஷம் மேல் ஏறாமல் இருப்பதற்காக, இறுக்கமாக கட்டு போடப்பட்ட காரணத்தினால் இரத்த ஓட்டம் தடைப்பட்டிருக்கலாம் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version