Home முக்கியச் செய்திகள் டெல்லி குண்டு வெடிப்பு: நெதன்யாகுவின் இந்திய விஜயம் ஒத்திவைப்பு

டெல்லி குண்டு வெடிப்பு: நெதன்யாகுவின் இந்திய விஜயம் ஒத்திவைப்பு

0

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இந்திய பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த வருட இறுதியில் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நெதன்யாகு திட்டமிட்டிருந்தார்.

இந்தநிலையில், டெல்லியில் நடைபெற்ற குண்டு வெடிப்புக்குப் பிறகு பாதுகாப்பு கவலை காரணமாக இந்த பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதுகாப்பு 

இதனடிப்படையில், பாதுகாப்பு மதிப்பீடு நிலுவையில் உள்ள நிலையில் அடுத்த வருடம் ஆரம்பத்தில் வரும் வகையில் புதிய திகதியை அவர் கோருவார் என தெரிவிக்கப்படுகின்றது.

நெதன்யாகு இந்தியா வரும் திட்டத்தை ரத்து செய்வது இத்துடன் மூன்றாவது முறை என தெரிவிக்கப்படுகின்றது.

NO COMMENTS

Exit mobile version