கொழும்பு துறைமுகத்தில் 45 நாட்களாக தேங்கி நிற்கும் 400 உப்பு கொள்கலன்களை
உடனடியாக விடுவிக்குமாறு இலங்கை உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் வேண்டுகோள்
விடுத்துள்ளது.
நாட்டின் போதுமான உப்பு இருப்பை பராமரிக்கும் திறனை இது பாதிக்கிறது எனவும்
அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
பொதியிடல் விதிமுறை
ரூபா 800 மில்லியன் மதிப்புள்ள மற்றும் மொத்தம் 11,200 மெட்ரிக் டன்கள் கொண்ட
இந்த இறக்குமதிகள், உள்நாட்டு உற்பத்தி குறைவாக இருந்ததால் ஏற்பட்ட இடைவெளியை
நிரப்புவதற்காக இறக்கமதி செய்யப்பட்டன.
இறக்குமதி செய்யப்பட்ட உப்பு பக்கற்றுகள் உள்ளூர் பொதியிடல் விதிமுறைகளுக்கு
இணங்கவில்லை என உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் கவலைகளை எழுப்பியுள்ளது.
