Home ஏனையவை ஆன்மீகம் 400 வருடங்கள் பழைமையான துணவி பிரகேஷ்வரன் ஆதி சிவனுக்கு மஹாகும்பாபிஷேகம்

400 வருடங்கள் பழைமையான துணவி பிரகேஷ்வரன் ஆதி சிவனுக்கு மஹாகும்பாபிஷேகம்

0

400 வருடங்களுக்கு மேல் பழைமையான துணவி பிரகேஷ்வரன் ஆதி சிவனுக்கு 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மஹாகும்பாபிஷேகம் இடம்பெறவுள்ளது.

தமிழ் தொல்லியல் மற்றும் பாரம்பரியச் செல்வங்களைப் பாதுகாப்பதையும், அவற்றை வருங்கால சந்ததியினருக்குக் கொண்டு சேர்ப்பதையும் நோக்கமாகக் கொண்ட யாழ்ப்பாண மரபுரிமைய மையத்தின் 3 வது செயற்றிட்டத்தின் அடிப்படையில் இந்த மஹாகும்பாபிஷேகம் இடம்பெறவுள்ளது.

மஹாகும்பாபிஷேகம்

வட்டுக் கோட்டை துணவி கிராமத்தில் வயலும் வயல் சார்ந்த மருத நில பரப்பில் அமைந்துள்ள 400 வருடங்களுக்கு மேல் பழைமையான பிரகேஷ்வரன் ஆதி சிவன் ஆலயம் இயற்கை மற்றும் மனித செயற்பாடுகளால் சிதைவடைந்த நிலையில் உள்ளது.

பழைமை மாறாத வகையில் மீள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு நிகழும் மங்களகரமான விசுவாவசு வருடம் ஆவணி மாதம் மாதம் 13ம் நாள் (29.08.2025) வெள்ளிக்கிழமை பூர்வ பக்ஷே ஷஸ்டி திதியும் சுவாதி நட்சத்திரமும் சித்த யோகமும் கூடிய காலை 9.20 மணி தொடக்கம் 10.30 மணி வரையுள்ள துலா லக்ன சுபமுகூர்த்த வேளையில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற திருவருள் கைகூடியுள்ளது.

2

7.08.2025 புதன்கிழமை காலை கர்மாரம்பம். விக்னேஸ்வரபூசை, புண்ணியாவாசனம். அனுக்ஞை. விநாயக. நவக்கிரக வழிபாடு மாலை வாஸ்து சாந்தி.

அன்னதான நிகழ்வு

நூதன மூர்த்திகள் ஸ்தாபனம். அஸ்டபந்தனம்.

28.08.2025 வியாழக்கிழமை காலை யாகபூசை.தைலாப்பியாசம், பக்தர்கள் எண்ணெய்க் காப்பு சாத்துதல் மாலை யாகபூசை, விம்பகத்தி தத்துவநியாசம் ஐயர்சாருதி இடம்பெறவுள்ளன.

29.08.2025 வெள்ளிக்கிழமை காலை யாகபூசை மகாகும்பாபிஷேகத்தை தொடர்ந்து தச தரிசனம் மகா அபிஷேகமும்,மதியம் அன்னதான நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

அடியார்கள் அனைவரும் நடைபெறும் கிரியைகளிலும் மஹா கும்பாபிஷேகத்திலும் பங்குபற்றி ஆதிசிவனின் திருவருளைப் பெற்றுய்யும் வண்ணம் வேண்டுகின்றோம் என யாழ்பாண மரபுரிமைய மையத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version